Saturday 12 May 2018


அகில இந்திய பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஓய்வூதியர் நலசங்க மாதாந்திர பொதுக்கூட்டம்  இரண்டாம் சனிக்கிழமை 12- 5- 2018 இன்று நடந்தது தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் சுமார் 180 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

காலை பத்து முப்பதுக்கு கூட்டம் தொடங்க தோழர் கே தனபாலன் மாவட்ட தலைவர் தலைமை ஏற்க தோழர் வி சுவாமிநாதன் மாவட்டச் செயலர் முன் நின்று நடத்தினார்.
தோழர் தேவராஜ் கடவுள் வாழ்த்து பாடினார் பிறகு தோழர் கே சந்தான கோபாலன் துணைத் தலைவர் சென்ற மாதம் மறைந்த தோழர் ராமச்சந்திர ஐயர் ரிட்டையர்ட் துணை பொது மேலாளர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த அவரின் பண்புகளையும் மாண்புகளையும் விளக்கி  பேச அனைத்து உறுப்பினர்களும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள் .
தோழர் கே அய்யனார் இணைச் செயலர் வரவேற்புரையும் சென்ற மாத கூட்ட அறிக்கையினையும் சமர்ப்பித்தார் பிறகு மாநிலச் செயலர் மாநில சங்க நிகழ்வுகள் பற்றியும் அகில இந்திய மாநாடு பற்றிய செய்திகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார் அங்கத்தினர்கள் குறைகளை கேட்டு அறிந்து தக்க பதில் அளித்தார்.
பிறகு தோழர் சந்தானகோபாலன் மாவட்ட மாநில மற்றும் அகில இந்திய சங்கத்தின் நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார் தோழர் கே எஸ் கே மாநில நிர்வாகி அகில இந்திய தலைவர் P.S Raman Kutty  அறிக்கையினை பற்றி விளக்கி  பேசினார் பிறகு தோழர் நாகராஜன் ரிட்டயர்டு துணை பொது மேலாளர் மறைந்த ராமச்சந்திர ஐயர் பற்றி பேசி நினைவஞ்சலி செலுத்தினார் .
தோழியர் ஆர் சந்திரகுமாரி மற்றும் தோழர் விஜயகுமார் சென்ற மாதம் பணி ஓய்வு பெற்ற துணை பொது மேலாளர்கள் இன்றைய கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தனர்  இதில் தோழியர் சந்திரகுமாரி தனது கடைசி மாத சம்பளமான ரூபாய் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தை அனாதை ஆசிரமங்களுக்கு நன்கொடையாக வழங்கி சிறப்பித்துள்ளார்கள் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று கரகோஷம் இட்டு தங்களது வாழ்த்துகளை தோழியருக்கு தெரிவித்து கொண்டார்கள் .
இன்று வழக்கம் போல் 7 மணி விழா நிகழ்வு மற்றும் 10 பிறந்த நாள் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தோழர் இருதயராஜ் அவர்கள் பொது நிகழ்வுகளையும் ஆன்மிகம் பற்றியும் உரையாற்றினார்கள் .
தோழர் பி எஸ் மூர்த்தி நன்றி நவில இனிய மதிய விருந்துடன் கூட்டம் இனிதாக நடந்தேறியது .
வாழ்க அகில இந்திய பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ஓய்வூதியர் நலச் சங்கம்!!!
 தோழமை வாழ்த்துக்களுடன்,
 சந்தானகோபாலன்,
 துணைத் தலைவர் , AIBSNLPWA,
தஞ்சாவூர்


  
                         








No comments:

Post a Comment